2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயதுச் சிறுமியைக் கடுமையான பலப்பிரயோகத்தை மேற்கொண்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய 54 வயது பாதுகாவலரை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா குற்றவாளியாக இனம் கண்டு தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி கர்பமாகியமையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் புலன் விசாரணைகளின் பிரகாரம் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எதிரிக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப் பகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விளக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் எதிரி தலைமறைவாகியிருந்தார. அதனை தொடர்ந்து எதிரி இல்லாத விளக்கத்துக்கு நியமிக்கப்பட்ட இவ்வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி சிறி சிவஸ்கந்தசிறியினால் நெறிப்படுத்தபட்டிருந்தது.
விசாரணைகளின் பின்னர் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா -
வழக்குத் தொடுநர் தரப்பு எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபித்துள்ளதாகவும் அதன் பிரகாரம் எதிரிக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையுடன் ஒரு லட்சம் ரூபா நீதிமன்ற அபராதம், மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடும் செலுத்தப்பட வேண்டுமந்த் தீர்ப்ப வழங்கியிருந்தார்.
இந்தக் குற்ற செயலின் போது எதிரியால் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள், சிறுமி கர்ப்பம் தரித்தமை, எதிரி வழக்கு விசாரணைகளில் இருந்து தலைமறைவாகியமை, சிறுமியின் பாதுகாவலரே இந்தக் குற்றச் செயலை புரிந்தமை போன்ற காரணிகள் எதிரிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட பிரதான காரணிகளாக அமைந்துள்ளன என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.
