கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், பறவை மோதியதையடுத்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கே திருப்பியதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேற்படி விமானம் 253 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்று மோதியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தை மீண்டும் தரையிறக்க விமானி தீர்மானித்தார்.
எரிபொருளைக் குறைத்த பின்னர், மேற்படி விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை மேற்கொண்டு வருகிறது.
