காணாமல்போயிருந்த மாணவி கல் குவாரி ஒன்றிலிருந்து சடலமாக மீட்பு: நடந்த விபரீதம்

 

இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை, மகவலதென்ன - கஜுவத்தை பகுதியிலுள்ள கல் குவாரி ஒன்றிலிருந்து 17 வயது பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது  என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மேற்படி மாணவி மகவலதென்ன பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முதல் மேற்படி மாணவி வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த நிலையில், இது குறித்து அந்த மாணவியின் தந்தையினால் பலாங்கொடைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேடுதல் நடவடிக்கைகளின்போது கல் குவாரி பகுதியிலிருந்து நேற்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொலையா, தற்கொலையா அல்லது நீரில் மூழ்கி ஏற்பட்ட விபத்தா என்பது தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவல்களும் வெளியாகவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று சனிக்கிழமை பலாங்கொடை மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பலாங்கொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.