கண்டி மாவட்டம், கம்பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய – பாத்திமா காடன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று கம்பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆற்றின் கரையோரத்தில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த பொதுமக்கள், உடனடியாக இது குறித்துக் கம்பளைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்
மீட்கப்பட்ட சடலம், நாவலப்பிட்டி சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48 வயதுடைய நபர் ஒருவருடையது என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மரணத்துகான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளுக்கும் பிரேத பரிசோதனைக்கும் உட்படுத்துவதற்காகச் சடலம் கம்பளை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்துக் கம்பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
