சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் சிலாபம் கருக்குப்பனையில் கைப்பற்றிய கடற்படை!

இலங்கைக் கடற்படையினர், சிலாபம் கருக்குப்பனைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளைக் கைப்பற்றினர்.

வடமேற்கு கடற்படைக் கட்டளையின் கடற்படைக் கப்பல் 'தம்பபண்ணி' நிறுவனத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, சிலாபம் கருக்குப்பனைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, புதர்க்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பத்து பொதிகள் சோதனையிடப்பட்டன. அதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 401 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாபம் மதுவரி திணைக்கள அலுவலகத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.