பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் செயல்: 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபா கையாடல் செய்தாராம்

 

இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் இரண்டு லட்சத்து 90 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப்பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் அலுவலர் அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய உள்ளகக் கணக்காய்வின் போதே இந்த நிதி முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒலிபெருக்கி அனுமதி பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைக்கும் வருமானப் பணம், அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் வைப்பிலிடப்பட வேண்டும். எனினும், அந்தொ பொலிஸ் நிலையத்திற்கு வந்த பணத்தை சந்தேகநபரான பெண் பொலிஸ் அலுவலர் உத்தியோகபூர்வ கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளமை கணக்காய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரியான உதவி பொலிஸ் அதிகாரி  சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட  குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரி அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.