
2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதாரண அனுமதியின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த பதிவு எதிர்வரும் *ஆகஸ்ட் 14* ஆம் திகதியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பான மேன்முறையீடுகள் *ஆகஸ்ட் 21* ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலதிக விபரங்களுக்கு UGC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான *www.ugc.ac.lk* இற்கு செல்லுமாறு ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.