A/L-புலமை பரிசில் பரீட்சை நடக்குமா-சற்று முன் வெளியான அறிவிப்பு

இலங்கையில் தற்போது எந்த இயற்கை பேரிடர் அச்சுறுத்தலும் இல்லாததால், க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இயற்கை பேரிடர் முகாமைத்துவ மையம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

பரீட்சை நாட்களில் சாதகமற்ற காலநிலை ஏற்படும் என காலநிலை எதிர்வுகூறல்களும் இல்லை என கூறப்படுகிறது.

இதன்படி, *ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 9* ஆம் திகதியும், *க.பொ.த உயர்தர பரீட்சை செப்டம்பர் 10* ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.