கடந்த வருடம் நவம்பர் 17-ம் திகதி இரவு 8.15 மணியளவில், மீட்டியாகொடை அளுத்வெல வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் காசாளராக பணியாற்றிய 48 வயது பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
விசாரணையில் சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கந்தர மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் நடந்த வேறு துப்பாக்கிச் சூடுகளுடனும் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
