நாட்=டை உலுக்கும் நோய் தொற்று: 93,635 நோயாளர்கள் அடையாளம்

நடப்பாண்டில் இதுவரை 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு காரணமாக 71 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொத்த நோயாளர்களில் 52.94 வீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹாவில் அதிகபட்சமாக 19,945 நோயாளர்களும், கொழும்பில் 18,588 பேரும் பதிவாகியுள்ளனர்.

மாதாந்த அடிப்படையில் ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,964 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஓகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 8,297 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.