மூடிய அறைக்குள் மஹிந்த மகன்: இரண்டு மணி நேரம் கழித்து வெளியே வந்தார்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, சுமார் இரண்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.

இன்று (12) முற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்ற அவர், முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுடன் தொடர்பாக வாக்குமூலம் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் வழங்கிய பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.