கள்ளக்காதலை கண்டித்த கணவனுக்கு நடந்த கொடுமை: மனைவி செய்த மோசமான செயல்

 கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குண்டுகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (39), விவசாயி. இவரது மனைவி ரூபா (38). 2 மகள்கள் உள்ளனர். கடந்த மாதம் 25ம் தேதி இரவு, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குண்டுகுறுக்கி மின்வாரிய அலுவலகம் அருகே, தலையில் பலத்த காயத்துடன் ராஜகோபால் இறந்து கிடந்தார். அருகில் டூவீலர் கிடந்தது. 

இதுகுறித்து அவரது மனைவி ரூபா புகாரின் பேரில், சூளகிரி போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி என்று வழக்குப்பதிந்து அப்பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் டூவீலரில் ராஜகோபாலுடன் ரூபாவும் சென்றது தெரிந்தது. ஆனால், அவர் உடன் செல்லாததுபோல் அடுத்தநாள் வந்து போலீசில் புகார் செய்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவரை அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சூளகிரி அருகே தனியார் நிறுவனத்தில் ரூபா பணியாற்றியுள்ளார். அப்போது, உடன் வேலை செய்யும் ஒட்டையனூரை சேர்ந்த நந்தகுமார்(34) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த ரூபாவின் கணவர் ராஜகோபால் கண்டித்துள்ளார். கடந்த 24ம் தேதி, இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.