லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை தொடர்பில் சற்றுமுன் முக்கிய அறிவிப்பு

ஆகஸ்ட் மாதத்துக்கான எரிவாயு விலையில் எந்தவிதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்போவதில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஏற்கனவே விற்பனை செய்யப்படும் விலையிலேயே எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்ய முடியும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் நான்காயித்து 465 ரூபாய்க்கும், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் ஆயிரத்து 792 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 835 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.