யாழில் அதிகளவான போதைப்பொருளை உட்கொண்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி!

யாழில் அதிகளவான போதைப்பொருளை உள்ளெடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றள்ளது.

இதன்போது கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றிரவு கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள வாழை தோட்டம் ஒன்றுக்குள் மயக்கமுற்ற நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவரை மீட்ட நண்பர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளின் அடிப்படையில், அதிகளவான போதைப்பொருள் பாவனையால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.