62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் ஆபத்து: திங்கள் முக்கிய நடவடிக்கை

 


62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நாளை மறுதினம் முதல் 19 ஆம் திகதி வரை டெங்கு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளீன் ஶ்ரீலங்கா செயலகம் அறிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மேலதிக பணிப்பாளர் நாயகம் இந்திக கமகே, எல் நினோ காரணியுடன் தொடர்புடைய வானிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, ஒரு ஆயத்த நடவடிக்கையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.


இதேவேளை, நடப்பு ஆண்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 97,000 ஐத் தாண்டியுள்ளது.


டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக பதிவாகியுள்ளது.