அதிகாலையில் அதிர்ந்த கொழும்பு: இருவர் வைத்தியசாலையில்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி - 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.