பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவிக்கையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில், ஆசனப்பட்டி பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பின்புற இருக்கையில் இரண்டு ஆசனப்பட்டிகள் மட்டுமே இருந்தால், அங்கு இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசனப்பட்டி இல்லாமல் மூன்றாவது பயணி நடுவில் அமர்ந்து பயணித்தால், அந்தப் பயணிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.
