மண்டபத்தில் அரங்கேறிய திடீர் திருப்பம் : மணமகனின் திட்டவட்டம்

 

தம் சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ மணம்மகளை அழைத்துச் செல்வதற்காகத் திருமணத்திற்கு வந்த இளைஞன் ஒருவனுக்கு,   சாட்சிக் கையெழுத்திடும் சமயம் நெருங்கிய வேளையில், “இந்தத் திருமணத்திற்கு எனக்கு விருப்பமில்லை” எனக் கூறி மணம்மகள் அவ்விடத்தைவிட்டு ஓட்டம் பிடித்தார். தனது காதலன் எனச் சொல்லப்படும் ஒருவனின் மோட்டார் காரில் ஏறி அவர் தப்பியோடியதால், இறுதியில் அவரது சொந்த உறவுமுறைத் தங்கையை மணமகளாக அழைத்துச் செல்ல வேண்டிய இக்கட்டான சூழல் மணமகனுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தும்பறைப் பகுதியிலுள்ள நகர் ஒன்றிலிருந்து பதிவாகியுள்ளது.

குளிர்ந்த மலைப்பிரதேச நகருக்கு அருகில் வசிப்பவரும், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவருமான இளைஞன் ஒருவனுக்குத் திருமண வயது கைகூடி வந்ததைக் கண்ட அவனது பெற்றோர்,  தும்பறைப் பகுதியில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த, தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தன் வயதுடைய யுவதியை இரு தரப்பினரின் சம்மதத்துடன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்திருந்தனர்.

இந்த புதிய தம்பதியரின் திருமண விழாவை மணம்மகள் வசிக்கும் கிராமத்திற்கு அருகிலுள்ள நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்துவதற்கு இரு தரப்பினரின் சம்மதத்துடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தத் திருமண நிகழ்விற்காக மணமகனின் தரப்பைச் சேர்ந்த மற்றும் மணம்மகளின் தரப்பைச் சேர்ந்த பல உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

  சடங்குகள் உள்ளிட்ட ஏனைய சம்பிரதாயங்களைத் தொடர்ந்து, அடுத்து வந்தது விவாகச் சான்றிதழில் கையெழுத்திடும் தருணமாகும். அதற்கமைய, வருகை தந்திருந்த விவாகப் பதிவாளர் புதிய தம்பதியினருக்கும் சாட்சிக் கையெழுத்திடத் தயாராக இருந்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமருமாறு அறிவித்தார். பதிவாளர் தனது ஆசனத்தில் அமர்ந்தவுடன், மணமகனுக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த மணம்மகள், “நான் இவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை” என்று கூறிவிட்டு, திடீரென ஆசனத்திலிருந்து எழுந்து ஹோட்டலுக்கு முன்பாக இருருக்கும் வீதியை நோக்கி ஓடத் தொடங்கினார். அதேவேளை, அவர் ஓடிய வீதிக்கு வந்த மோட்டார் காரில் ஏறிய அவர், திருமணத்திற்கு வந்திருந்த இரு தரப்பு உறவினர்களையும் நண்பர்களையும், ஏன் மணமகனையும் திகைக்க வைத்துவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

இந்த எதிர்பாராத சம்பவத்தால் இரு தரப்பு உறவினர்களும் நண்பர்களும் பெரும் அதிர்ச்சிக்கும் சங்கடத்திற்கும் உள்ளாகினர். ஏற்பட்ட இந்த அவமானத்திற்கும் சங்கடத்திற்கும் தங்களை மன்னிக்குமாறு மணம்மகளின் உறவினர்கள், மணமகனின் உறவினர்களிடம் மன்னிப்புக் கோரினர். இருப்பினும், மணம்மகள் இல்லாமல் தங்களால் ஊருக்குத் திரும்ப முடியாது என்று மணமகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

 இதனால், இரு தரப்பினருக்கும் இடையில் மீண்டும் ஒரு கலந்தாலோசனை நடத்தப்பட்டு, மணம்மகளின் திருமணமாகாத சொந்தத் தங்கையை அவருக்கு வாழ்க்கைத் துணையாக வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்த யோசனைக்கு அத்தங்கையின் மறுப்பும் இருக்கவில்லை என்பதால், சடங்கு முறைப்படி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, புதிய மணம்மகளை ஊருக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு மணமகனுக்குக் கிடைத்தது.