மட்டு நகரை அதிர வைத்த சம்பவம்-2 பிள்ளைகளுடன் தவறான முடிவெடுத்த தந்தை

 


மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் தவறான முடிவெடுக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (23.11.2026) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது மனைவிக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறிய நிறுவனம் ஒன்று, சட்டவிரோதமான ஆவணங்களைத் தயாரித்து அவரை ஓமானுக்கு அனுப்பியுள்ளதாகவும், தனது இரண்டு பிள்ளைகளையும் பராமரிக்க மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதேபோன்று தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள ஏற்கனவே இரண்டு தடவைகள் முயற்சித்துள்ளதாகவும் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கல்லடிப் பாலத்தில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்தபோது, அப்பகுதி மக்களால் அவர் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்