காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஸ்பெயின் நாட்டுப் பெண் ஒருவர் படுகாயடடைந்துள்ளார்.
குறித்த பெண், தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீகிரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற இவ்வாறான காட்டு யானைத் தாக்குதல்களில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தம்புள்ளை – கண்டலம பிரதான வீதியில் கண்டலம குளத்திற்கு அருகில் இன்று (25-11-2026) அதிகாலை உந்துருளியில் பயணித்த ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு அம்பாறை – தமன, வீரபிட்டிய பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் மொரகஹபள்ளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
