ஆசிரியர், அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அரசுக்கு விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

 


தற்பொதைய அரசு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேதனக் கோரிக்கைகளை மறந்துவிட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கல்வித் துறைக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் குறிப்பாக நிலுவையிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு வேதன உயர்வைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்தில் ஆசிரியர்களும் அதிபர்களும் முக்கிய பங்காற்றியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எஞ்சியுள்ள வேதனத் திருத்தத்தை உடனடியாக வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதியை வலியுறுத்தி, கடந்த ஜூன் 26ஆம் திகதி 10,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொழும்பில் ஒன்றுகூடிப் போராட்டத்தில் அவர்களில் ஒருவர் இன்றுவரை கண்பார்வையை இழந்த நிலையில் இருப்பதாகவும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். “இத்தகைய தீவிரமான போராட்டங்களில் இன்னும் நினைவூட்ட வேண்டிய விடயம் ஏதேனும் எஞ்சியிருக்கிறதா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அர சாங்கத்துக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டங்களின் ஒரு பகுதியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளை ஓரங்கட்டத் தீர்மானித்தால்,அவற்றை நினைவூட்ட எமக்கு நியாயமாகக் கிடைக்க வேண் டிய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதை எமது பொறுப்பாகக் கருதுகிறௌம்” எனவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.