மாவீரர் துயிலும் இல்லத்தில் துயர் பகிர வந்தாரா? அல்லது மகிந்த தரப்பினருக்குத் தூது அனுப்ப வந்தாரா?*

 

அரசியல் என்பது எத்தனை விசித்திரமானது என்பதை அவ்வப்போது அரசியல்வாதிகளின் நகர்வுகள் உணர்த்துகின்றன.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் அவரது குடும்பத்தினருடனும் அரசியல் நெருக்கத்தை வெளிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மகிந்த ராஜபக்சவைப் பாராட்டியும் அவரது அரசியல் தரப்புடன் இணக்கமான கருத்துக்களை வெளியிட்டும் வந்திருந்தார்.

குறிப்பாக, மகிந்த ராஜபக்ச தரப்புடன் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் அவர் முன்னெடுத்த நகர்வுகள் பேசுபொருளாகியிருந்தன.

மகிந்த தரப்புக்கு ஆதரவாகக் கருத்துகளை வெளியிட்டு, அரசியல் ரீதியான தொடர்புகளை ஏற்படுத்த முயன்ற அர்ச்சுனா, இன்று மாவீரர் நினைவேந்தல் களத்தில் பங்கேற்றுள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மாவீரர்களின் தியாகத்தையும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் மறந்து கடந்த காலத்தில் மகிந்த தரப்பினருக்குத் துதி பாடிய அர்ச்சுனா, தற்போது மாவீரர் துயிலும் இல்லத்தில் துயர் பகிர வந்தாரா? அல்லது மகிந்த தரப்பினருக்குத் தூது அனுப்ப வந்தாரா? என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.