யாழில் அதிகாலையில் நேர்ந்த பதற்றம்

 

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று (29) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது, டிப்பர் வாகனங்கள் மூலம் 10 இற்கும் மேற்பட்ட SLT தொலைத்தொடர்புத் தூண்கள் மற்றும் மின்சாரக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, குறித்த டிப்பர் வாகனங்களைப் பொலிஸார் துரத்திச் சென்ற நிலையில், டிப்பர் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு டிப்பர் வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அப்பகுதி வீதிகளில் அதிகளவிலான மணல் கொட்டிக் காணப்படுவதால், அவ்வீதிகளூடாகப் பயணிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.