Type Here to Get Search Results !

இலங்கையை உறைய வைத்து துப்பாக்கி சூடு-டான் பிரசாத் உயிரிழக்கவில்லை-அவசர குடுக்கு ஊடகங்களின் அவசரத்தனம்..!

 

(22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் டேன் பிரியசாத் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது அவர் உயிரிழக்கவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

நேற்று இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து  அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad