புதன்கிழமை, 28 மே 2025
மேஷம்
aries-mesham
குடும்பத்தில் தனவரவு குறைவதால், நிம்மதியும் குறையும். மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். சிலருக்குக் கௌரவ குறைச்சல் களும், வீண் பயம் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
பணவரவு மூலம் மன திருப்தி ஏற்படும். மாணவர்களுக்கு அறிவுத்திறன் கூடி கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். கடமை தவறாது செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.
மிதுனம்
gemini-mithunum
பணமுடை காரணமாக பொருளாதார நிலை சீராக இருக்காது. குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது. உடல் சோர்வு மற்றும் அவமானங்கள் ஏற்படலாம்.
கன்னி
virgo-kanni
தெய்வ நம்பிக்கையும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். கோவில் திருப்பணிகள் மற்றும் அன்னதானங்கள் செய்ய மனம் விழையும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
திறமைகள் முழுவதும் காட்டிப் பணிபுரிந்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. அக்கம் பக்கத்தினருடன் அனுசரணையாக நடப்பது நல்லது. வாகனங்களில் நிதானமாகச் செல்லவும்.
கடகம்
cancer-kadagam
ஆரோக்கியம் மேம்படும். படுக்கை சுகங்கள், நல்ல ஆடைகள், நண்பர்கள் அருகாமை, நல்ல அதிர்ஷ்டம் என எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். பிரிந்திருந்த தம்பதிகள் இணைவர்.
சிம்மம்
leo-simmam
பணிபுரியும் பெண்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். நேர்மையோடு வியாபாரம் செய்தால் அதிக இலாபத்தை காணலாம். தலைமைப்பதவி, வசதியான வீடு ஆகியவை கிடைக்கும்.
துலாம்
libra-thulam
அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் பயன் பெறலாம். மனைவியின் கலகத்தால் உறவுகளிடையே உரசல்கள் ஏற்படலாம். பொருட்களை கவனமாக பாதுகாத்து இழப்பைத் தவிர்க்கலாம்.
மீனம்
pisces-meenam
புத்திர பாக்கியம் ஏற்படும். எல்லாக் காரியங்களிலும் மனைவி கை கொடுப்பாள். பாக்கிய விருத்தியும், சகோதரரால் நன்மைகளும் ஏற்படும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.
தனுசு
sagittarius-thanusu
எல்லா நலன்களும் உண்டாகும். மகிழ்ச்சி பொங்கும். ஆரோக்கியம் மற்றும் இனிய பயணங்களால் இன்பம் கூடும். பலவகையிலும் பணவரவு அதிகரிக்கும். அழகிய வீடு அமையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
சாதுர்யப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பல வழிகளில் பணவரவு உண்டாகிப் பெரிய மனிதர் எனப் பெயர் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயங்கள் ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
வீட்டில் திருட்டை தவிர்க்க எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். தாயின் உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை. சிலர் பணமுடை காரணமாக தூக்கமின்றி அலைவர்.