நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் 24 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (இடர் முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்தார்.