"குடுத்து வச்சவன்.. நாசம் பண்ணிட்டாங்க.. சானியா மிர்சாவை வேட்டையாடிய.." மருத்துவர் பகீர்!

இந்திய டென்னிஸ் உலகில் புகழ்பெற்ற வீராங்கனையான சானியா மிர்சா, தனது ஆரம்ப காலத்தில் பல்வேறு கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டார். பிரபல மருத்துவர் காந்தராஜ், BBTTamilCinema என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். 

சானியாவின் ஆடைத் தேர்வு மற்றும் மத நம்பிக்கைகளை விமர்சித்து, அவருக்கு எதிராக வேண்டுமென்றே வழக்குகள் தொடரப்பட்டன. டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் குறுகிய ஆடைகளை அணிந்ததற்காக அவர் ஆபாசமாக உடையணிந்ததாக குற்றம்சாட்டப்பட்டார். 

இது மட்டுமல்லாமல், அவரது மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும், விளையாட்டில் தடை விதிக்க வேண்டும் என்றும் பலர் புகார் அளித்தனர். டென்னிஸ் விளையாட்டின் தன்மைக்கு ஏற்ப ஆடைகள் அணிவது இயல்பு என்றாலும், அதுவே சானியாவுக்கு எதிராக வழக்காக மாறியது. 

ஒரு வழக்கில், நீதிமன்ற நீதிபதி சானியாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இதற்கு முக்கிய காரணம், நீதிபதியின் தனிப்பட்ட ஆசை என்று கூறப்படுகிறது. இது சானியாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. 

சானியா மிர்சா சினிமா நடிகை ரேஞ்சுக்கு பிரபலமாகவும், அழகாகவும் இருந்தது தான் இதற்கு காரணம். இந்த வழக்கை பார்த்த பலரும்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும்.. சிலர், குடுத்து வச்சவன்.. அனுபவிக்கிறான்.. என்று கேளிக்கையான மனநிலையில் தான் பார்த்தார்கள்.

இதனால் விரக்தியடைந்த அவர், “என்னைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்துக்கு அழைக்கப்படுகிறேன். இனி இந்தியாவில் டென்னிஸ் விளையாடப் போவதில்லை, இங்கு இருக்கவும் போவதில்லை” என்று வேதனையுடன் கூறினார். அவருடைய விளையாட்டு வாழ்க்கை வேட்டையாடி.. நாசம் பண்ணிட்டாங்க.. ஆனால், தற்போது உலகப்புகழ் பெற்ற ஒரு வீராங்கனையாக சானியா மிர்சா இருக்கிறார் என்று மருத்துவர் காந்தராஜ் தெரிவித்தார். 

இந்த சம்பவங்கள் சானியாவின் மன உறுதியை சோதித்தன. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, அவர் தனது திறமையால் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். 

இன்றைய தலைமுறைக்கு இந்த சவால்கள் தெரியாமல் இருக்கலாம், ஆனால் சானியாவின் விடாமுயற்சியும், தைரியமும் ஒவ்வொரு இளைஞருக்கும் உத்வேகம் அளிக்கின்றன. சமூகத்தின் பழமைவாத கண்ணோட்டங்களை எதிர்கொண்டு, ஒரு பெண்ணாக தனது கனவுகளை நனவாக்கிய சானியாவின் பயணம், உண்மையிலேயே பாராட்டுக்குரியது.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post