உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
நுவரெலியா மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,883 வாக்குகள் - 12 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,515 வாக்குகள் -4 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 1,963 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 1,739 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) - 909 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 258 வாக்குகள் - 1 உறுப்பினர்