கிளிநொச்சியில் பயங்கரம்-சம்பவ இடத்திலே இளைஞன் பலி..!

 

கிளிநொச்சி பூநகரியில் நேற்று மாலை வாள்வெட்டு: சம்பவ இடத்தி லேயே பலியான இளைஞன்.

கிளிநொச்சி பூநகரி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பூநகரி தம்பிராய் பகுதியில் நேற்று மாலை (31)ஆறு முப்பது மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பூநகரி செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்த கந்தசாமி பிரணவன் (வயது 28 )என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இனம் தெரியாதவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பிரேதபரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை பூநகரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Related Post
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post