நீண்ட கால சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தாயின் சிறு நீரகம் பொறுத்தப்பட்டு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது.
அவரது இறப்பு மிகவும் வேதனையாக உள்ளது
யுத்தத்தின் போது குண்டுவீச்சில் தனது இடது கண்ணை இழந்த விஜயராணி, தனது மகள் தர்ஷ்ணியை உயிருடன் வைத்திருக்க, நான்கு நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை நான்கு மணிக்கு மன்னாரிலிருந்து பேருந்தில் ஏறி, நான்கு மணி நேரம் பயணம் செய்து யாழ்ப்பாண மருத்துவமனைக்கு சென்று தேவையான குருதி சுத்திகரிப்பினை செய்து வந்தார்.
தர்ஷ்ணி ஒரு பிரகாசமான மாணவி, அவர் அதிக மதிப்பெண்களைப் பெற்று ஒரு மருத்துவராக வேண்டும் என்ற நோக்குடன் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார், ஆனால் தனது நோயால் இந்த இலக்கை அடைய முடியவில்லை. அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வந்தபோது, அவர் பங்கு வர்த்தகத்தையும் கற்றுக்கொண்டார்.
அத்தகைய ஒரு புத்திசாலியான மாணவி-இந்த மிகப்பெரிய இழப்பிலிருந்து மீள விஜயராணிக்கும், அவரது மகன் லோஜனுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இறைவன் பலம் தர வேண்டி கொள்கிறோம்.
தர்ஷ்ணியின் ஆத்மா சாந்தியடையட்டும்.