மீன் சந்தையில் நேர்ந்த பயங்கரம்-தந்தைக்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம்..!

மாத்தறை - அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையத்துக்கு முன்னால் மீன் வியாபாரிகள் சிலர் ஒருவரை ஒருவர் சரமாரியாக வெட்டிக்கொண்டதில் மூவர் காயமடைந்துள்ளதாக அக்குரெஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 57 வயதுடைய தந்தையும் 33 வயதுடைய மகனும் உட்பட மூவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம், குறித்த விற்பனை நிலையத்துக்கு அருகில் உள்ள சிசிரிவி கமரால் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு உதவி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் அக்குரெஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையத்துக்கு முன்னால் சென்ற மீன் வியாபாரிகள் சிலர் 33 வயதுடைய மகனை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். 

இதனை அவதானித்த தந்தை மீன் வெட்டும் கத்தியால் சந்தேக நபர்களை தாக்கியுள்ளார்.

பின்னர் சந்தேகநபர்களும் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிகொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் மகனும் தந்தையும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகராறை தடுக்க முயன்ற நபரொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரெஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post