விஜய் ஊர்ல கால் வச்ச நேரம்..வானில் நடந்த அதிசயம்! சிலிர்த்த கிராம மக்கள் ..!

 


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி கிராமத்தில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். சூட்டிங்கின் போது சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்த நிலையில் சூட்டிங் தாமதமானது. இந்நிலையில் 2வது நாளாக விஜய் படப்பிடிப்புக்கு விஜய் வந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டதால், விஜயின் வாகனம் மிக தாமதமாகவே விடுதிக்கு சென்றது. இந்நிலையில் கோடையில் கீழ்மலை பகுதிகளில் தண்ணீர் பற்றக்குறை ஏற்படும் அபாயம் இருந்த நிலையில், விஜய் கால் வைத்த நேரம் 2 மணி நேரம் மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முன்னணி நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மூன்று நாள் படப்பிடிப்பிற்காக கடந்த வியாழன் இரவு அய்யம்பாளையம், சித்தரேவு மலைச் சாலை வழியாக தாண்டிக்குடி ஊராட்சிக்குட்பட்ட மங்கலம் கொம்பு அருகே அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்தார்.

அப்போது அவருக்கு ஆயிரக்கணக்கானோர் வழி எங்கும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து நேற்று ஜனநாயகன் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதற்காக தாண்டிக்குடி அருகே அசன் கொடை செல்லும் வழியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் செட் அமைக்கப்பட்டுல்லது.

இந்த நிலையில் நடிகர் விஜயை காண திண்டுக்கல், செம்பட்டி, வேடசந்தூர், பெரியகுளம் ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் தாண்டிக்குடி கிராமத்திற்கு படையெடுத்து வந்த நிலையில் அவர்கள் யாரையும் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்கு அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் படப்பிடிப்பு முடிந்து தங்கும் விடுதிக்கு திரும்பும் விஜய்யை பார்த்து விட வேண்டும் என்று பிரதான குடியிருப்பு பகுதியில் நேற்று காலை முதல் காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை வேளையில் தீடீரென பெய்த மழையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்த படியே நீண்ட நேரம் காத்திருந்தனர். அதனை தொடர்ந்து மலையின் காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கேரவன் வாகனத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடிகர் விஜய் காத்திருந்தார். அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் மழை நின்ற பிறகு நான் தங்கி இருக்கும் தனியார் தங்கும் விடுதிக்கு வாகனத்தின் மூலம் வந்த பொழுது அவரை காண்பதற்காக சாலைகளில் சாலை ஓரத்தில் நின்றிருந்த சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் விஜயின் வாகனத்தை கண்டதும் உற்சாகமடைந்தனர்.

இதில் சாலையோரத்தில் காத்திருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை கண்ட நடிகர் விஜய் கையசைதும், சிரித்தபடியே காரில் பயணத்தை மேற்கொண்டார். அப்போது இளைஞர்கள் சிலர் விஜய் சென்ற தீடீரென வாங்கனதை சூழ்ந்ததால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் வாகனத்தின் பின்புறத்தில் ஓடிய இளைஞர்கள் ஒரு கட்டத்தில் காரை நகர விடாமல் சூழ்ந்து கூச்சலிட்டனர். அதன் பிறகு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் கூட்டத்தை கலைத்து அங்கிருந்து நடிகர் விஜய்யை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகவும் காணப்பட்டது. இந்நிலையில் இன்று 2வது நாளாக சூட்டிங் நடக்கும் நிலையில், காலை முதல் நீண்ட நேரமாக நடிகர் விஜயை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜயை கண்டதும் ஆர்வத்துடன் செல்போனில் படம் எடுத்தபடியே ஆரவாரம் செய்தனர். மேலும் இந்த பகுதியில் மழை இல்லாமல் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் நிலவியது. இந்த நிலையில் நடிகர் விஜய் தங்களது கிராமத்திற்கு வந்த நேரம் கன மழை பெய்துள்ளது என்று அந்த அகுதியுள் வசிப்பவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post