குருநாகல் பகுதியிலுள்ள கல்கமுவ, பாலுகடவல வாவியில் நீராடச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளதோடு, இன்று (13) மதியம் நீராடுவதற்காக குறித்த வாவிக்குச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.மரணித்த இருவரும் 12 மற்றும் 17 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.