முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல வருடங்களாக தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.அரசாங்கம் நிர்ணயித்த ஊதியத்தை வழங்குவதாக எழுத்துப்பூர்வ வாக்குறுதியை அளிக்கும் வரை வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர மாட்டோம் என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.