இதன்படி சாதாரண குவார்ட்டர் மது பாட்டிலுக்கு 6 ரூபா முதல் உயர் ரக பாட்டிலுக்கு 30 ரூபா வரை விலை உயர்கிறது. 750 மி.லி. கொண்ட முழு பாட்டிலுக்கு 24 ரூபா முதல் 120 ரூபா வரை விலை உயர்கிறது.
பீருக்கான விலை 5 ரூபா முதல் 10 ரூபா வரை உயர்கிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு பிராண்டிற்கு தகுந்தபடி கணக்கிடப்படும்.