அரச பேரூந்தில் திடீரென ரத்த வாந்தி எடுத்தவர் உயிரிழப்பு..!

 உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருகோணமலைக்கு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அன்புவெளிபுரம் திருகோணமலையைச் சேர்ந்த 48 வயதுடைய  மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இரத்த வாந்தி எடுத்து பலியான குடும்பஸ்தர் ; யாழ் சென்று திரும்புகையில் பஸ்ஸில் இடம் பெற்ற துயரம் | Tragedy Strikes On Bus Trip After Family Death

மேற்படி நபர் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும்  செவ்வாய்க்கிழமை நண்பகல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி இ.போ.ச. பஸ்ஸில் சென்றுள்ளார்.

இதன்போது அவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post