பெரியநீலாவணை கிராமத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் அடித்து தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெரியநீலாவணை நீலாவணன் வீதியில் வசிக்கும் குறித்த பெண் அவரது வீட்டில் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் (30) மதியம் சடலமாக மீட்கப்பட்டார்.
கொலை செய்யப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா (வயது 38) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் அம்பாறை குற்றத் தடுப்பு பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து மோப்பநாய் உதவிகளுடன் சந்தேக நபர்கள், தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற வீட்டில் இருந்த சி.சி.டிவி கேமராவின் உதிரி பாகங்களையும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது
சம்பவம் இடம்பெற்று வீட்டுக்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைக்காக அம்பாரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸார் பெரியநீலாவணை பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.