பூனைக்கண் புவனேஸ்வரி 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஆன்மீகத்துக்கு நான் வந்து 8 வருடங்களாகிவிட்டது.
தாராபுரம் காளி தேவி கோயிலில் நான் இருப்பதற்கு காரணம் காளிதேவிதான்.. என்னுடைய கனவில் தோன்றி, இந்த இடத்திற்கு வருமாறு அழைத்தார். இந்த இடத்தை 8 ஆண்டுகளாக அலைந்து தேடி, இப்போதுதான் வந்தேன்.
ஆன்மீக பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்" என்றார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கருத்து கூறியிருக்கிறார்.
Cheyyaru Balu யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "1994ல் நடிகை புவனேஸ்வரியிடம் நான் பேட்டி எடுத்திருக்கிறேன்.
சினிமா துறையில் தான் அனுபவித்த கொடுமைகளை எல்லாம் பகிர்ந்து கொண்டார். ஆனால், அதையெல்லாம் பதிவு செய்யாதீங்க பிரதர் என்று கேட்டுக் கொண்டார். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு கவர்ச்சி நடிகையாக நடிக்கும்போது, பல்வேறு பின்னடைவுகள் ஏற்படும்.
புவனேஸ்வரி குறித்த செய்தி அன்று தமிழ்நாட்டையே உலுக்கியது.. ஒரு பிரபல நாளிதழையே ஆடவைத்த சம்பவமும் உள்ளது. ஒருமுறை விபச்சார வழக்கில் புவனேஸ்வரியை கைது செய்தபோது, "நான் விபச்சாரி என்றால், இந்த 4 நடிகைகள் யாரு' என்று பகிரங்கமாகவே அந்த நடிகைகளின் பெயர்களை சொல்லி கேள்வி கேட்டார்.
ஒரு பிரபல நாளிதழ், அந்த நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு, புவனேஸ்வரியின் பேட்டியை அரை பக்கத்துக்கு வெளியிட்டிருந்தது.
அந்த பேட்டி மிகவும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிட்டது. அப்போதிருந்த நடிகர் சங்கம் ஒன்று திரண்டு கண்டித்தது. வெளிநாட்டிலிருந்த ரஜினியை வரவழைத்து, வலுக்கட்டாயமாக கண்டித்து பேச வைத்தார்கள்.