நேற்று இரவு கொழும்பு நகரைத் தாக்கிய மினி சூறாவளியால் பல வீதிகளில் மரக்கிளைகள் உடைந்து விழுந்து, வீடுகளின் கூரைகள் உடைந்து, சிறு கட்டடங்கள் சேதமடைந்து, விளம்பரப் பலகைகள் தரையில் விழுந்து காணப்படுகின்றன.
புயலின் தாக்கத்தால் கொழும்பு நகரின் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.