மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த இளம் இளைஞனின் சடலம்-குழப்பத்தில் பொலிசார்..!

 

அநுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (01) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மதவாச்சி - உல்பத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.

இது கொலையா அல்லது உயிர்மாய்ப்பா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.