கொட்டாஞ்சேனையில் நேற்று(18.05.2025) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, முச்சக்கர வண்டியில் இருந்து எழுந்து சென்ற ஒருவரே துப்பாக்கியால் சுடப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர், 44 வயதுடையவர். நான் இந்த வீதியால் வந்துகொண்டிருந்த போது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கு ஆயத்தமாக வைத்திருந்தனர்.
அப்போது, காயமடைந்த நபர் முச்சக்கர வண்டியில் அமர்ந்திருந்தார். இதனையடுத்து அவர் முச்சக்கர வண்டியில் இருந்து எழுந்து சென்ற போதே அவர் சுடப்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.