மாங்குளத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற யாழை சேர்ந்த நபர்-கட்டி வைத்து நையபுடைத்த அயலவர்கள்..!

மாங்குளத்தில் நேற்று  வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த ஒருவர் அயலவர்களால் நையப்புடைக்கப்பட்டு போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இவர் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்று விசாரணையில் கூறியுள்ளார் .

வீட்டில் ஆண்கள் யாரும் இருக்காத நிலையில் நிகழ்ந்த இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டு காயமடைந்த பெண்கள் மாங்குளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .