இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியும் பயங்கரவாதத்தை கையாள்வதும் ஒரே நேரத்தில் தொடர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தி இந்து செய்தித்தாள் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி, வளர்ச்சி கண்ட இலங்கையை இந்தியா பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் அதேவேளை மகாவலி மேம்பாட்டுத் திட்டத்தை செயற்படுத்தவும் முதலீட்டு வலயங்களை அமைக்கவும் நாங்கள் உறுதிபூண்டோம் என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறதா அல்லது இன்று இருப்பது போன்று இருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.