முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் செயற்பாடு தொடர்பில் மீண்டும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மகிந்த ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் அவரது மனைவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதனை காட்டும் புகைப்படம் இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது.
அதில் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளால் ஷிராந்தி ராஜபக்ஷவின் காலணிகளை எடுத்துச் செல்வதை காட்டுகிறது.
இது அதிகார திமிரில் செய்த செயற்பாடு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மகிந்த ஆட்சிகளின் போது அவரின் புதல்வர்கள் உட்பட உறவினர்கள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.