யாழில் மற்றுமொரு பெரும் சோகம்-உழவு இயந்திரத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலி..!

 உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் அராலி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்றிரவு தனது உழவு இயந்திரத்தின் கீழே இறங்கி நின்றவாறு திறப்பினை இயங்க செய்துள்ளார்.

இதன்போது கியர் இயக்கத்தில் இருந்த உழவு இயந்திரம் திடீரென இயங்க ஆரம்பித்தது. 

இந்நிலையில் நிலைகுலைந்த குறித்த குடும்பஸ்தர் கீழே விழுந்ததால் அவர் மீது உழவு இயந்திரத்தின் சக்கரம் ஏறியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 38வயதான பத்மநாதன் தனீஸ்வரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

இதனையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post