வியாழக்கிழமை, 19 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
கோபம் தவிர்த்து சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம். மிகுந்த புத்திசாலிகள், ஆயினும் புத்தி மழுங்கியவர் போல் செயல்படுவர். பெண்களால் பணவிரயம் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
தன லாபத்துடன் எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும். பிரிந்தவர்கள் ஒன்றுகூடி மகிழ்வர். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும்.
மிதுனம்
gemini-mithunum
எல்லாக் காரியங்களும் எதிர்பார்த்ததைவிட அனுகூலமாய் நடக்கும். தன்னம்பிக்கை, தைரியம், எல்லாம் ஓங்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கன்னி
virgo-kanni
பலவழிகளிலும் தனவரவு கூடும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். புதிய காதல் ஏற்பட்டு அதனால் மகிழ்ச்சி ஏற்படும். புத்தாடை, ஆபரண வகைகள் சேரும்.
மகரம்
capricorn-magaram
வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும். நேரத்தை வீணாக்காமல் தன்னம்பிக்கையுடன் படித்தால் தேரலாம்.
கடகம்
cancer-kadagam
மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள். பேச்சு வன்மையால் பெரும் சாதனைகள் புரிவார்கள். அரசு மற்றும் அரசியல் வாதிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும்.
சிம்மம்
leo-simmam
ஒதுக்கி வைத்த உறவுகள், தங்கள் வளர்ச்சி கண்டு பொறாமை கொள்வர். முகஸ்துதிக்காக பாராட்டவும் செய்வார். மனைவியின் கலகத்தால் பாசமான பந்துக்கள் கூடப் பகைவர் ஆவர்.
துலாம்
libra-thulam
ஆரோக்கியம் பெருகும். பயண சுகம் கூடும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரிகளுக்கு ஓரளவு இலாபம் கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
பெரிய மனிதர்களின் நட்பால் பெருமையடைவீர்கள். பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.
தனுசு
sagittarius-thanusu
தொழில் முதலீடுகளை கூடிய மட்டும் குறைப்பது நல்லது. வீட்டிலிருந்து வாகனத்தை நகர்த்துவதற்கு முன் அனைத்து பாகங்களையும் பரிசோதித்து எடுக்கவும். மனநிம்மதிக்கு கடவுளை வேண்டவும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
சிரத்தையற்ற செயலால் திறமை இருந்தும் நல்ல பெயர் கிடைக்காது. சொல்பேச்சு கேட்காத பிள்ளைகளால் நிம்மதி குறையும். வியாபாரப் போட்டி காரணமாக போராடி வெற்றி பெறும் நிலை ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
குடும்பத்தில் நிம்மதி அற்ற நிலை ஏற்படும். தொழிலில் இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் அதிக முதலீடுகள் செய்யாதிருப்பது நல்லது. தீய வழிகளில் தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டியது வரும்.