அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று வியாழக்கிழமை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
முதற்கட்ட தகவல்களின்படி, மேகனிநகர் அருகே விமானம் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து நடந்த இடத்தில் அடர்த்தியான புகை வெளியேறியுள்ளதாகவும், இதனால் அந்தப் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புப் படை உள்ளிட்ட அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. சேதம் அல்லது உயிரிழப்புகளின் அளவை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
எவ்வாறாயினும், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.