சக்தி வாய்ந்த வைகாசி விசாகத்தில் உங்கள் ராசிபலன் எப்படி..!{9.6.2025}

 

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
மிகவும் பிரபலமான நபருடன் ஏற்படும் நட்பால் நன்மைகள் பல அடைவீர்கள். பல்வேறு வழிகளிலும் பணவரவு அதிகரிக்கும். காதல் வலையில் விழ நேரலாம். மனைவி மூலம் மகிழ்ச்சியும், நன்மைகளும் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
புதிய வாகனம் வாங்க நினைக்கும், உங்கள் எண்ணங்கள் ஈடேறும். அதன் காரணமாக புதிய உற்சாகங்கள் பொங்கும். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் துணைபுரியும் நாள்.
மிதுனம்
gemini-mithunum
உயர் அதிகாரிகளிடம் பேசும்போது, அதிர்ந்து பேசாமல், அமைதியாக பேசுவது, உயர்வுக்கு வழிவகுக்கும். சுயநம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
கன்னி
virgo-kanni
தேவையற்ற பழிகளைச் சுமக்காமல் இருக்கக் குடும்பத்தாரிடம் பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவும். கவனமாக படித்தால் தடைகளைத் தகர்த்தெரியலாம். உடல் சோர்வு அதிகரிக்கும்.
மகரம்
capricorn-magaram
அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். அரசிடம் எதிர்பார்க்கும் சலுகைகள் அனைத்தும் தடை, தாமதங்கள் இன்றி கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
கடகம்
cancer-kadagam
தன வருவாய் போதுமான அளவுக்கு திருப்திகரமாக இருந்தாலும், வழக்கு விவகாரங்களில் சில சிக்கல்களை சந்திக்க நேரும். உடல் நிலையில் அக்கறை தேவை, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டிய நாள்.
சிம்மம்
leo-simmam
மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்கும். பணியில் கூடும் சம்பள உயர்வால், சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் மதிப்பு உயர்வது மற்றும் அதிகரிகளின் பாராட்டும் கிடைக்கும்.
துலாம்
libra-thulam
தொழில் விரிவாக்கத்தில் ஈடுபட படுபவர்களுக்கு, எண்ணியபடி வங்கிக் கடன்கள் சுலபமாக கிடைக்கும். அதன் காரணமாக முன்னேற்றம் காண்பர். இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும்.
மீனம்
pisces-meenam
எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். அனைவருக்கும் நன்மை செய்யும் எண்ணத்தைக் கைக் கொள்வது நல்லது. பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகலாம்.
தனுசு
sagittarius-thanusu
தனலாபமும், எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படும். அரசு வேலைக்கு மனு செய்தவர்கள் எதிர்பார்த்தபடி சாதகமான பதில்கள் வரும். கடினமான பணியை கூட சுலபமாக முடித்துவிடுவார்கள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
நல்லபடியாக உங்கள் ஆரோக்கியத்தைப் பேண வேண்டிய நாள். வாகனங்களை வெளியில் எடுக்கும் முன் அனைத்து பாகங்களையும் சோதித்துப் பார்த்து, எடுப்பது நல்லது.
கும்பம்
aquarius-kumbam
மனைவியின் மனம் மகிழ, மலையை கூட அசைத்து விடுவார்கள். மழலைச் செல்வங்கள், மடியில் போட்டுக் கொஞ்சும் நாள் விரைவில் வரலாம். தெய்வீகக் காரிய ஈடுபாடு, தான தர்ம சிந்தனைகள் ஏற்படும்.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.