வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் காணாமல் போன மீனவர்
யாழ் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்
இன்று (26) அதிகாலை கட்டுமரம் மூலம் மீன்பிடிக்க சென்ற மீனவர் கரை திரும்பாத நிலையில் சக மீனவர்களால் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மீனவர் பயணித்த கட்டுமரம் மீட்கப்பட்டுள்ளது
மீட்கப்பட்ட கட்டுமரத்தில் படகு மோதிய அடையாளங்கள் காணப்படுவதுடன் காணாமல் போன மீனவரை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது.