தெலுங்கானா மாநிலம் கட்வாலாவைச் சேர்ந்த 32 வயதான தேஜேஸ்வர், தனியார் சர்வேயராகப் பணியாற்றி வந்தவர். ஆந்திராவின் கர்னூலைச் சேர்ந்த 26 வயதான ஐஸ்வர்யாவை, 2025 மே 18-ல் திருமணம் செய்தார். ஆனால், திருமணமாகி ஒரு மாதம் கூட முடியாத நிலையில், ஜூன் 17-ல் வேலை விஷயமாக வெளியே சென்ற தேஜேஸ்வர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சில நாட்களில், ஆந்திராவின் களேறு நகர் கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த சடலம், கையில் "அம்மா" என்ற பச்சை குத்தலால் தேஜேஸ்வர் என உறுதியானது.

காவல்துறை விசாரணையில், தேஜேஸ்வரின் மனைவி ஐஸ்வர்யா மீது சந்தேகம் எழுந்தது. திருமணத்திற்கு 10 நாட்களுக்கு முன், ஐஸ்வர்யா வீட்டை விட்டு ஓடி, பின்னர் திரும்பி, வரதட்சணை காரணமாக ஓடியதாக தேஜேஸ்வரிடம் கூறியிருந்தார்.
இதனால், வரதட்சணை இல்லாமல் திருமணச் செலவை ஏற்று, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார். ஆனால், ஐஸ்வர்யா ஏற்கனவே திருமணமான திருமாள்ராவை காதலித்ததாக வதந்திகள் பரவின. விசாரணையில், ஐஸ்வர்யா ஒரு மாதத்தில் ஒரு எண்ணுக்கு 2000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் செய்தது தெரியவந்தது.
கர்னூல் வங்கியில் மேலாளராகப் பணியாற்றிய திருமாள்ராவ், ஐஸ்வர்யாவின் தாய் சுஜாதாவுடன் கள்ளஉறவில் இருந்துள்ளார். இதற்காக, அடிக்கடி ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு போக்கும் வரத்துமாக இருந்துள்ளார்.
நிறைய பணம் செலவு செய்வது, ஜாலியாக பேசுவது என இருந்த திருமாள் ராவ் மீது காதல் வயப்பட்டுள்ளார் ஐஸ்வர்யா. ஆனால், திருமாள் ராவ் தன்னுடைய தாயுடன் கள்ள தொடர்பில் இருக்கிறார் என்பதை அறியாமல் இருந்துள்ளார்.
அதே நேரம், தன்னுடைய மகள், கள்ளக்காதலன் திருமாள் ராவுடன் காதலில் இருப்பதை தெரிந்து கொண்ட சுஜாதா, மகளுக்கு தேஜேஸ்வர் என்பவருடன் திருமணம் பேசி முடித்தார்.
திருமணம் முடிந்து ஐஸ்வர்யா தன்னுடைய கணவருடன் முதலிரவுக்கு சென்ற போது, மறுப்பக்கம் திருமாள் ராவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
ஆனால், ஐஸ்வர்யா திருமாள்ராவை திருமணம் செய்ய விரும்பினார். இதனால், இருவரும் இணைந்து தேஜேஸ்வரைக் கொலை செய்ய திட்டமிட்டனர். ஐஸ்வர்யா, தேஜேஸ்வரின் பைக்கில் ஜிபிஎஸ் பொருத்தி கண்காணித்தார்.
திருமாள்ராவ், நாகேஷ், பரசுராமர் என்ற கூலிப்படையை ஏற்பாடு செய்தார். "நிலம் அளக்க வேண்டும்" எனக் கூறி, தேஜேஸ்வரை காரில் அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
சடலத்தை களேறு கால்வாயில் வீசினர். திருமாள்ராவ், கூலிப்படைக்கு 2 லட்சமும், ஐஸ்வர்யாவுடன் பயணத்திற்கு 20 லட்சம் கடனும் தன்னுடைய வங்கியில் வாங்கியுள்ளார்.
ஆனால், காவல்துறை விசாரணையில், ஐஸ்வர்யா, சுஜாதா, திருமாள்ராவ் உள்ளிட்டோர் வசமாக சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டனர். இந்த கொலை, காதல், பொய், சதியின் சோகமான உச்சமாக அமைந்தது.